தற்போது நடைபெற்று வரும் யூரோ 2020 கால்பந்து தொடரிலிருந்து இங்கிலாந்து அணி இறுதி 16 அணிகள் சுற்றில் இருந்து ஜேர்மனியை 2-0 என வீழ்த்திய தொடரிலிருந்து வெளியேற்றியது.
குறித்த போட்டியின் பிறகு கவலையான சம்பவம் ஒன்று நடந்தது. இந்தப் போட்டியின் போது ஜேர்மனிய சிறுமி ஒருவர் அழுவது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து சிலர் சமூக வலைத்தளங்களில் அந்த சிறுமியை பார்த்து கேலி செய்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜோயல் ஹுக்ஸ் எனும் வேல்ஸ் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து குடிமகன், 500 பவுண்ட்களை இலக்காக கொண்டு ஒரு நிதி திரட்டலை ஆரம்பித்தார். அந்த நிதி திரட்டும் கணக்கில் அவர் ஒரு செய்தியை எழுதினார்.
“இங்கிலாந்தில் இருக்கும் அனைவரும் மோசமானவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்கு அந்த ஜெர்மனிய சிறுமிக்காக 500 பவுண்ட்களை இலக்காக கொண்டு நிதி திரட்ட போகிறேன்” என எழுதினார்.
தொடர்ந்து அவர், “சிறுமியின் பெற்றோர் இதை ஒரு நல்ல விருந்துக்காக செலவிடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். இதனால் இங்கிலாந்தில் இருக்கும் எல்லோரும் பயங்கரமானவர்கள் அல்ல, நாங்களும் அக்கறை கொள்கிறோம் என்பதை அந்த சிறுமி அறிவார். இந்த நடவடிக்கை உலகத்தை மாற்ற போவதில்லை ஆனால் அந்த சிறுமிக்கு இது ஏதாவது செய்யும்” என குறிப்பிட்டார்.
தற்போது அந்த நிதி திரட்டும் கணக்கில் எதிர்பார்த்ததையும் விடத் தாண்டி 26,342 பவுண்ட்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.
Via -Pappare Tamil