ஜேசன் ரோய்க்கு போட்டித் தடை!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரரான ஜேசன் ரோய்க்கு, சர்வதேச போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாணயப்படி சுமார் 0.95 மில்லியன் ரூபாஅபாராதமும் விதிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் ஜேசன் ரோய் மேற்கொண்ட தவறுகள் குறித்த எந்த தகவலையும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிடவில்லை.

ஜேசன் ரோய் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன், இது போன்ற தவறுகளை அடுத்த 12 மாதங்களுக்குள் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஜேசன் ரோய்க்கு மீண்டும் தடைவிதிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.