ஜோஷ்வா சில்வா, கைல் மேயர்ஸ் அசத்தல் – இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஜோஷ்வா சில்வா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரெனாடாவில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷகிப் 49 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 31 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட், கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வா சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டோன், சகிப் மகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
93 ஓட்டங்கள் பின்தங்கிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணி 2வது இன்னிங்சில் 120 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்து.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கைல் மேயர்ஸ் 5 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
28 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது ஜோஷ்வா சில்வாவுக்கும், தொடர் நாயகன் விருது பிராத்வெயிட்டுக்கும் அளிக்கப்பட்டது.