தனது அதிரடிக்கு அத்திவாரமிட்டு உதவிய 3 முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பட்டியலிடும் சேவாக்..! எனது அடிச்சுவடுகளை (Footwork) மேம்படுத்த வேண்டும் என்று எல்லோரும்சொன்னார்கள், ஆனால் எப்படி என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை.

எல்லோரும் எனது அடிச்சுவடுகளை (Footwork) மேம்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள், ஆனால் எப்படி என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை என்று கருத்துரைத்துள்ள இந்தியாவின் முன்னாள் அதிரடி நாயகன் வீரேந்தர் சேவாக் அவருக்கு உதவி செய்த 3 கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்

வீரேந்தர் சேவாக் தனது டெஸ்ட் வாழ்க்கையின் பெரும்பகுதி அதிரடியால் மிரட்டி எதிரணி பந்துவீச்சாளர்களை கிலிகொள்ள செய்தவர்களில் முதன்மையானவர், அத்தோடு டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போன்று அதிரடியாகவே ஆடுபவர்.

 

 

“எனது கால் இயக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள், ஆனால் எப்படி என்பதற்கான பதில்கள் யாரிடமும் இல்லை” என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்களை அடித்த ஒரே இந்திய வீரரான சேவாக் கூறினார்.

இருப்பினும் சரியான ஆலோசனை ஒன்று அல்ல, மூன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வந்தது என்றும் சேவாக் கூறினார்.

மன்சூர் அலி கான் பட்டோடி, சுனில் கவாஸ்கர், மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோரின் சரியான ஆலோசனைகள் தனது விளையாட்டை மேம்படுத்த உதவியது என்பதை அவர் விளக்கினார்.

எல்லோரும் எனது கால் நகர்த்தல்கள் குறித்து கேள்வி எழுப்பினர் , ஆனால் எனக்கு யாரும் அது குறித்து தெளிவாக தெரிவிக்கவில்லை எனவும் கருத்தை சேவாக் தெரிவித்துள்ளார்.