தோனியை நம் கண்முன்னே கொண்டுவந்த இந்தியாவின் ஷெபாலி வர்மா -சர்சைக்குரிய ஆட்டமிழப்பு ( வீடியோ இணைப்பு)

இந்திய, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனியை நம் கண்முன்னே கொண்டு வந்தார் என இந்தியாவின் ஷெபாலி வர்மா புகழப்படுகின்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியின் இளம் நட்சத்திரம் ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்தது, மகளிர் போட்டிகளுக்கு LED ஒளிர் சமிக்ஞைகள் வழங்க கிரிக்கெட் அதிகாரிகள் தவறியதை விமர்சனத்துக்கு கொண்டு வந்தது.

55 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கிய ஷஃபாலி, இடது கை சுழற்பந்து வீச்சாளர் சோஃபி எக்லெஸ்டோனின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஆமி ஜோன்ஸ் ஸ்டம்பிங் செய்தார்.

 17 வயதானவர் ஷஃபாலி , தாமதமாக Cut Shot ஆட முயன்றார், முடியவில்லை.கீீீீீப்பர் ஆமி பெயில்களை அப்புறப்படுத்தியபோதும் ஷஃபாலி பின் கால்களை இழுத்து மீண்டும் கிரீசுக்குள் செல்ல முயன்றாள்.

 

ஆஸ்திரேலிய முன்னாள் பெண் கிரிக்கெட் வீரர் லிசா ஸ்டாலேகர் இந்த வீடியோவை ட்வீட் செய்து எழுதினார், “இது 2 ஒருநாள் போட்டிகளில் இது இரண்டாவது முறையாகும் என குறிப்பிட்டார்.

எல்.ஈ.டி பெயில்கள் பந்து அல்லது விக்கெட் கீப்பரின் கையுறைகளுடன் தொடர்பு கொள்ளும் நேரத்தில் ஒளிரும், இதன் மூலம் மூன்றாவது நடுவர் அந்த நேரத்தில் துடுப்பாடுபவர் கால்கள் எங்கு இருந்தன என்பதை சரிபார்க்க உதவுகிறது அத்தோடு சரியான முடிவுக்கு வர முடியும் என்பதே அவரதும் வாதமாகும்.

எது எவ்வாறாயினும் ஷஃபாலி,  தோனியை நம் கண்முன்னே கொண்டுவந்ததாக பாராட்டுகின்றனர்.

( வீடியோ இணைப்பு)