நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் இளம் நட்சத்திரம் …!

நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் இளம் நட்சத்திரம் …!

இலங்கையில் இடம்பெற்று வரும் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஒன்றில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய இளம் வீரர் ஒருவர் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சனத் ஜெயசூரிய கிரிக்கெட் அக்கடமி அணிக்காக விளையாடி வரும் சந்துல் விஐயரத்ன என்ற 13 வயதான இளம் வீரர் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் .

நாலந்தா கல்லூரியின் கிரிக்கெட் ஆட்டக்காரராக விளையாடி வரும் இவர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டிலும் இதே மாதிரியான ஒரு சாதனையை இவர் நிலைநாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது .

இது மாத்திரமல்லாமல் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடசாலை சகலதுறை ஆட்டக்காரரான விருதையும் சந்துல் விஐயரத்ன பெற்றுக்கொண்டிருந்தமையும் சிறப்பம்சமாகும் .

சர்வதேச போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனையை இலங்கையின் லசித் மலிங்க தன் வசம் வைத்திருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.