பங்களாதேஷுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஜிம்பாப்வே ,இரண்டாவது T20 யில் அபார வெற்றி..!

பங்களாதேஷுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஜிம்பாப்வே ,இரண்டாவது T20 யில் அபார வெற்றி..!

பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபது20 போட்டியில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி கொண்டது.

வங்காளதேசம் ,சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றிருந்த நிலையில், தொடரின் முக்கியமான போட்டியாக இன்றைய போட்டி கருதப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய  ஜிம்பாப்வே 166 ஓட்டங்களை பெற்றது ,167 எனும் இலக்குடன்் ஆடிய பங்களாதேஸ் 143 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதன் மூலமாக 23 ஓட்டங்களால் மிகச் சிறந்த வெற்றியை பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.