பயிற்றுவிப்பாளர் குழாமில் மாற்றம் கொண்டுவந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி- விபரம் …!

இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழாமில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக ECB அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரர் 45 வயதான ட்ரெஸ்கோதிக் துடுப்பாட்ட பயிற்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் 5,825 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதேநேரம் வேகப்பந்து பயிற்சியாளராக ஜான் லூயிஸ் அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், சுழல் பந்து பயிற்சியாளராக நியூசிலாந்தின் ஜீத்தான் பட்டேலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கிறிஸ் சில்வெர்வூட் தொடரும் அதேவேளை பால் காலிங்வூட் மற்றும் கிரகாம் தோர்ப் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாக தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் நடித்த பிரண்ட்ஷிப் திரைப்பட டீசர்…!
Next articleஅதே பிட்சையே பயன்படுத்துங்கள்- விவியன் ரிச்சர்ட்ஸ் ஏன் இப்படி சொல்கின்றார் ?