பூம்ராவின் சாதனையை தகர்த்த பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் …!
T20 கிரிக்கெட்டில் மிக இளவயதில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி நிலைநாட்டியுள்ளார் .
இந்த சாதனையை நிலை நாட்டும் போது அவருக்கு இருபது வயதும் 326 நாட்களும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை முன்னர் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா வசம் இருந்தது .இருபத்து மூன்று வயதாக இருக்கும்போது ஜஸ்பிரித் பும்ரா ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் இன்று PSL போட்டிகளில் கைப்பற்றிய விக்கெட் மூலமாக புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.