பெற்றோல் , டீசல் , Gas போன்று டிக்கட்டுக்களுக்கும் நீள்வரிசை (புகைப்படங்கள் ?)

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட் முன் நீண்ட வரிசை!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட் விநியோகம் இன்று (4) ஆரம்பமானது.

இந்தப் போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலும் கண்டி பல்லேகல மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று காலை முதல் இலங்கை கிரிக்கெட் இணையத்தளமான srilankacricket.lk மற்றும் இலங்கை கிரிக்கெட் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் விற்பனையாகின்றன.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக போட்டிக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய பெருமளவிலான விளையாட்டு ரசிகர்கள் ஏற்கனவே வருகை தந்துள்ளதனை அவதானிக்க முடிந்தது.

புகைப்படங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

YouTube காணொளிகளுக்கு செல்லுங்கள் ?