மீண்டும் கிரிக்கெட் உலகில் பேசுபொருளான ஹாஷிம் அம்லா..!

மீண்டும் கிரிக்கெட் உலகில் பேசுபொருளான ஹாஷிம் அம்லா..!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான ஹாசிம் அம்லா கிரிக்கெட் ரசிகர்களால் மீண்டும் இன்றைய நாளின் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட 38 வயதான அம்லா, இங்கிலாந்தில் கழக மட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் இடம்பெறுகின்றது கவுன்டி போட்டிகளில் சரே பிராந்திய அணிக்காக விளையாடி வருகிற ஹாசிம் ஆம்லா, இன்று ஓர் அபார இன்னிங்சை ஆடி அந்த அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்.

போட்டியின் இறுதி நாளான இன்று ஹம்சயார் அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பெடுத்தாடிய சர்ரே அணி மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆயினும் இனறைய நாள் முழுவதும் ஹாசிம் அம்லா மொத்தமாக 278 பந்துகளை சந்தித்து ஆட்டம் இழக்காது 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை கவனிக்கத்தக்கது.

இதைவிட இன்னும் ஒரு அபாரமான இன்னிங்சை தென் ஆப்பிரிக்க அணிி சார்பாக இந்திய அணிக்கு எதிராக டெல்லி மைதானத்தில் விளையாடியமையும் கவனிக்கத்தக்கது.

இன்றைய போட்டியில் ஹாஷிம் அம்லாவின் மிகப் பொறுப்பான நிதானமான ஆட்டத்தினர துணையோடு இன்றைய போட்டியில் சர்ரே அணி தோல்வியில் இருந்து தப்பித்துக் கொண்டது .