மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு ,பாகிஸ்தான் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு ..!

மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு ,பாகிஸ்தான் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு ..!

பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலியாவின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணி விபரம் அரோன் பின்ச் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் முன்னணி சிரேஷ்ட வீரர்களான ஸ்டார்க், ஹெஸ்ஸெல்வூட், கம்மின்ஸ் ஆகிய மும்மூர்த்திகளான பந்துவீச்சாளர்கள் மூவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதோடு டேவிட் வார்னர், மக்ஸ்வெல்  ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

24 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலியா முன்னதாக டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வருகின்ற 4ஆம் திகதி மார்ச் மாதம் விளையாட உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.