மைதானத்தில் அடித்துக்கொள்ள பார்த்த இலங்கை, பங்களாதேஷ் வீரர்கள். பதிலடி கொடுத்த அசலங்க, பானுக..! (காணொளி இணைப்பு)

மைதானத்தில் அடித்துக்கொள்ள பார்த்த இலங்கை, பங்களாதேஷ் வீரர்கள். (காணொளி இணைப்பு)

ஐசிசி டுவென்டி20 உலக கிண்ணத்தின் இன்று மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அசலங்க, நிஸ்ஸங்க ஆகியோர் 3 வது விக்கட்டில் அற்புதமான அரைச் சத இணைப்பாட்டத்தை புரிந்தனர்.

அதன் பின்னர் இலங்கை 2 விக்கெட்டுகளை விரைவாக இழந்தாலும், அசலங்க, பானுக ஆகியோர் நம்பிக்கை கொடுத்தனர்.

இறுதியில் இந்த போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

வங்காளதேசம் ,இலங்கை அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் வங்கதேச அணி துடுப்பாடிகொண்டிருந்தபோது லிட்டன் தாஸ் ஆட்டமிழக்கச் செய்த இலங்கையின் பந்துவீச்சாளர் லகிரு குமார வாய்த் தகராறில் ஈடுபட்டார்.

மைதானத்தில் இருவரும் அடித்துக் கொள்ளும் அளவிற்கு தகராறு முற்ற நடுவர்கள், சக வீரர்கள் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் களத் தடுப்பில் ஈடுபட்டிருந்த லிட்டன் தாஸ் மிக முக்கியமான இரண்டு பிடியெடுப்புகளை நழுவவிட்டிருந்தார்.

அசலங்க, பானுக ராஜபக்ச ஆகியோரது இலகவான பிடியெடுப்புகளை நழுவவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவே மிகப்பெரிய பின்னடைவாகவும் போட்டியில் பங்களாதேஸ் அணியின் தோல்விக்கும் காரணமானது்

இதனை சரியாக பயன்படுத்திய அசலங்கா, பானுக ஆகியோர் இறுதி 10 ஓவர்களில் வெற்றிக்கு 92 ஓட்டங்கள் தேவையாக இருந்தாலும் இலக்கை இலகுவாக கடக்க வழிசமைத்தனர்.

அசலங்க ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.இலங்கை 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

காணொளியை பாருங்கள்.