வரலாற்றை மாற்றி எழுதியது பாகிஸ்தான்- #INDvPAK அணிகளுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பாகிஸ்தான் வசம் ..!
ஐசிசி T20 உலகக் கிண்ண போட்டிகளில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை நடந்தும் உலகக்கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை தோற்கடித்த வரலாறுகள் இதுவரை இல்லை எனலாம்.
50 ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ண போட்டிகளில் 7 தடவைகள் இந்தியாவிடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான், டி20 உலகக் கிண்ண போட்டிகளில் 5 தடவைகள் தோல்வியை தழுவியுள்ளது.
ஆக மொத்தத்தில் உலகக்கிண்ண போட்டிகளில் என்றாலே 12 தடவைகள் இந்தியாவிடம் ,பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.
நீண்ட வரலாறுகளுக்கு பின்னரும், நீண்ட தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின்னரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறது.
போட்டியின் ஆரம்பம் முதலே பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகரித்து இருந்தது, முதல் ஓவரில் ரோகித் சர்மாவை கோல்டன் டக் முறை மூலமாக ஷஹீன் ஷா அஃப்ரிடி ஆட்டமிழக்கச் செய்ததிலிருந்து போட்டியில் முழுவதுமான கட்டுப்பாடு முதலிலிருந்தே பாகிஸ்தான் வசமே இந்த்தது.
விராட் கோலி சிறிது போராடி 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள இந்திய அணி 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
153 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு தலைவர் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரும் மிகப்பெரிய அதிர்ச்சியை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்தனர் .
முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான், மீதமான இறுதிப் பத்து ஓவர்களில் வெற்றிக்கு 81 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.
பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 13ஆவது ஓவரிலேயே விக்கெட் எதுவும் இழக்கப்படாத நிலையில் ஆரம்ப இணைப்பாட்டமாக 100 ஓட்டங்கள் எட்டி நம்பிக்கை ஊட்டினர்.
பாகிஸ்தான் பந்துவீச் ஆரம்பித்ததிலிருந்து எவ்வாறு முதலாவது ஓவரில் இருந்து பாகிஸ்தான் போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த்ததோ, அதேபோன்று துடுப்பெடுத்தாட ஆரம்பித்ததிலிருந்தும் போட்டியை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த்து.
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றி மூலமாக உலகக்கிண்ண வரலாற்றில் புதிய சரித்திர சாதனையும் படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் 13 பந்துகள் மீதமிருக்க பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, 29 ஆண்டு கால காத்திருப்பை இன்று நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவை உலக கிண்ண போட்டிகளில் தோற்கடித்த முதல் தலைவர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார், உலகக்கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய முதல் இந்திய தலைவர் என்கின்ற சோதனையும் கோலி வசமானது.
இந்திய அணி T20 போட்டிகள் வரலாற்றில் இதுவரை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய வரலாறுகள் இல்லை, அது மாத்திரமல்லாமல் பாகிஸ்தான் அணியும் டி20 போட்டிகள் வரலாற்றில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வரலாறும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்தத்தில் வரலாறுகள் புதுப்பிக்கப்பட்ட ஒரு போட்டியாக இன்றைய போட்டி அமைந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான்.