விராட் கோலியை பழைய பன்னீர்செல்வமா விரைவில் காணலாம்- எடுத்திருக்கும் அதிரடி முடிவு, ரோகித் தயாராகிறார்..!
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமான தலைவராக இருந்துவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான தலைமைத்துவத்தை கையளிப்பதற்கு முனைந்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் எங்களுடைய விளையாட்டு.com ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டிருந்தது, விராட் கோலியை தலைமைத்துவத்தில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவிடம் (ODI, T20 ) போட்டிகளுக்கான தலைமைத்துவத்தை கொடுப்பதற்கு இந்திய கிரிக்கெட் சபையும் முனைவதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
இப்போது கிடைத்திருக்கும் செய்திகளின் அடிப்படையில் விராட் கோலி தானாக முன்வந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இந்திய கிரிக்கெட் சபையின் முக்கியஸ்தர் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி தம்பதி குழந்தைப் பாக்கியத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில் இருந்தே விராட் கோலி இது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபையும் முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக அனைத்து வகையிலும் துடுப்பாட்டத்தில் முதல்நிலை துடுப்பாட்ட வீரராக துடுப்பாட்ட பங்களிப்பை தொடர்ச்சியாக நல்க வேண்டும் என்ற ஆசை மீண்டும் கோலிக்கு பிறந்திருக்கிறது, அனைத்து வகையான தலைமைத்துவமும் கோலியின் துடுப்பாட்டத்தை கொஞ்சம் பாதிப்பதாக கோலி உணர்கிறார், ஆகவே டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தலைவராக இருந்து விட்டு, ஒருநாள் மற்றும் டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கான தலைமைத்துவத்தை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைப்பது தொடர்பில் கோலி முனைப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிகமாக உலக டுவென்டி டுவென்டி தொடருக்கு பின்னர் கோலியின் தலைமைத்துவம் மாற்றப்பட்டு, ரோஹித் சர்மாவிடம் தலைமைத்துவம் கையளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
32 வயதாகும் கோலி, 34 வயதாகும் ரோஹித் சர்மாவிடம் டுவென்டி20 , ஒருநாள் போட்டிகளுக்கான தலைமையைை அளிக்க உள்ளார், 2022 டுவென்டி டுவென்டி உலகக்கிண்ண போட்டிகளும், 2023 ஒருநாள் போட்டிகளுக்கான உலக்கிண்ணம் என்று அடுத்தடுத்து இரண்டு உலகக் கிண்ணங்களில் இந்தியா விளையாடவுள்ளமை தகுறிப்பிடத்தக்கது.
கோலி மொத்தமாக 65 டெஸ்ட் போட்டிகளில் 38 வெற்றிகளையும், 95 ஒருநாள் போட்டிகளில் 65 வெற்றிகளையும், 45 டுவென்டி டுவென்டி போட்டிகளில் 29 வெற்றிகளையும் இந்தியாவிற்கு தேடிக் கொடுத்துள்ளார்.