வீதிப் பாதுகாப்பு லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் -அட்டவணை வெளியாகியது…!

இந்தியாவில் நடைபெறும் வீதிப் பாதுகாப்பு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 8 அணிகள் விளையாடுவதுடன், சர்வதேச கிரிக்கெட் களத்தில் பிரகாசித்த பல வீரர்களும் இந்த போட்டியில் விளையாடவுள்ளனர்.

திலகரத்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதல் போட்டியில் செப்டம்பர் 11ஆம் தேதி விளையாட உள்ளது. முதல் போட்டியில் ஷேன் வொட்சன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது.

இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி செப்டம்பர் 13ம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது. நான்கு மைதானங்களில் நடைபெறும் இந்தப் போட்டி தொடரில் அக்டோபர் 1ஆம் தேதி ராய்ப்பூரில் இறுதிப் போட்டி நடைபெறும்.

இலங்கை அணியின் போட்டி அட்டவணை ?
செப்டம்பர் 11- ஆஸ்திரேலியா -இரவு 7.30
செப்டம்பர் 13 – இங்கிலாந்து – இரவு 7.30
செப்டம்பர் 17 – தென் ஆப்பிரிக்கா- இரவு 7.30
செப்டம்பர் 25 – நியூசிலாந்து – பிற்பகல் 3.30
செப்டம்பர் 27 – பங்களாதேஷ் – பிற்பகல் 3.30