ஹசரங்கவுக்கு போட்டியாக உருவெடுக்கும் இலங்கையின் இளம் வீரர்- ராவின் டீ சில்வா..!

ஹசரங்கவுக்கு போட்டியாக உருவெடுக்கும் இலங்கையின் இளம் வீரர்- ராவின் டீ சில்வா..!

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் இளையோர் உலக கிண்ண போட்டிகளில் இலங்கை அணி காலிறுதி போட்டியில் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

அதன்பின்னர் 5,6 ம் இடங்களுக்கான போட்டியில், காலிறுதி போட்டிகளில் தோல்வியை தழுவிய அணிகள் விளையாடிவருகின்றன.அதனடிப்படியில் இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை இளையோர் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரர் ராவின் டி சில்வா வீசிய மிரட்டும் பந்துவீச்சு ரசிகர்களால் பிரமிப்புடன் கொண்டாடப்பட்டுவருகின்றது.

இன்னுமொரு ஹசரங்க இலங்கை அணிக்கு தயாராகிறார் என ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

வீடியோ இணைப்பு.