ஹனுமா விஹாரி

ஹனுமா விஹாரி இன்றைக்கு சிட்னியில் விளையாடிய இன்னிங்ஸ் என்பது என்றைக்கும் நின்று பேசப்போகின்ற ஒரு வரலாற்று இன்னிங்ஸ்.
சதம் அடிக்கும் வீரர்களை மட்டும்தானா நாம் கொண்டாடுவோம் , டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ம் இன்னிங்சில் அதுவும் 5 ம் நாளில் ஒரு வீரர் 100 பந்துகளை சந்தித்து போட்டியை Draw செய்வதற்காக போராடினால் அதுவும் சதத்துக்கு நிகரானதே என்பது என் கருத்து.
விஹாரி இன்றைக்கு அப்பிடி ஒரு சதத்துக்கு சற்றும் குறைவில்லாத அற்புத இன்னிங்ஸ் ஆடினார் என்பேன்.
இந்த உலகம் வெற்றிகளின் போது மட்டும்தான் நம்மை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும், அதற்காக நாம் கோஹ்லி போன்று ரன் மெஷினாக ஓட்டங்களைக் குவித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
அது கோஹ்லிக்கு சர்வசாதாரணமானதாக இருக்கலாம்.
இப்படி நாம் வெற்றி இன்னிக்ஸ்களை ஆடாவில்லையேல் காலுக்குள் தூக்கி போட்டு மிதித்துவிடும் இந்த சமூகம் . அந்த பட்டியலில் சிட்னி டெஸ்ட் ஆரம்பிக்க முன்னர் முதலிடத்தில் இருந்தவர் இந்த விஹாரி.
கிட்டத்தட்ட விஹாரிக்கும் இன்றைய போட்டி அப்படிப்பட்டதுதான். இந்த தொடரில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, இன்று அவர் சம்பவம் எதனையும் செய்யவில்லையாயின் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வுக்கே கதவடைப்பு நிகழ்ந்திருக்கலாம்.
சுப்மான் கில் தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள, வெளியில் அகர்வால், ராகுல் என்று பலரும் இருக்கிறார்கள். இதைவிடவும் சிரேயாஸ் ஐயர் கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்.
2017 ல் ஆப்கானிஸ்தான் அணி இந்திய சுற்றுலாவை மேற்கொண்ட போது, கோஹ்லிக்கு உபாதைவர பதிலாக ரஹானே முதல் தடவையாக தலைவரானார். கோஹ்லிக்கு பதிலாக அணிக்குள் கொண்டுவரப்பட்டவர் வேறு யாருமல்ல சிரேயாஸ் ஐயர்.
அப்படியெல்லாம் பலத்த போட்டி இருக்கும் நிலையில் இன்றும் சறுக்கியிருப்பாராக இருந்தால் ஹனுமா விஹாரிக்கு கதவெல்லாம் தாழ்பாள்போட்டு இறுக கதவடைப்பு நடந்திருக்கும்.
ஆனால் விஹாரியின் இன்றைய அற்புதமான இன்னிங்ஸ் எல்லா வாய்களையும் பிளாஸ்ட்டர் போட்டி ஒட்டிவிட்டிருக்கின்றது.
இவர் ஒரு டெக்னிக்கலி கரெக்ட் பேட்ஸ்மேன்.
இந்தியாவில் ராகுல் எப்படியோ அந்த வரிசையில் இவரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
விஹாரி அணிக்கு தேவைதானா , சான்ஸ்செல்லாம் வேஸ்ட் பண்ணிக்கொண்டிருக்கானே என்று அலுவலகத்தில் ஒருவர் சொல்லும்போது நான் சொன்னது இதுதான்.
? ஹனுமா விஹாரி ❤ ரோஷன் சில்வா
இலங்கையில் எவ்வாறு ரோசேன் சில்வா இருக்கிறாரோ இந்தியாவில் ஹனுமா விஹாரி தான். ரோஷன் சில்வாவை ஒதுக்கி வைத்தது போல் விஹாரியை ஒருசில சறுக்கல்களுக்காக ஒட்டுமொத்தமாய் ஒதுக்கிவிட கூடாதென்பதே என்நிலைப்பாடு.
இருவரும் Technically Correct Batsman என்னும் வகையறாவுக்குள் சந்தேகத்துக்கு இடமின்றி உள்வாங்கிக்கொள்ளலாம். டெல்லியில் வைத்து ரோஷன் சில்வா ஆடிய அந்த இன்னிங்ஸ் இன்று விஹாரியின் இன்னிங்க்ஸும் சரிக்கு சமானதே.
ரோஷன் சில்வா 2017 டிசம்பரில் அறிமுகமான இந்தியாவுக்கெதிரான டெல்லி டெஸ்ட்டில் இலங்கைக்கான வெற்றி இலக்கு 410
ரோஷன் சில்வாவும் ,திக்வெல்ல , தனஞ்சய டீ சில்வா இணைந்து 288 பந்துகள் விளையாடினார்கள். தனஞ்சய டீ சில்வா உபாதை காரணமாக வெளியேறினாலும் 48 ஓவர்களுக்கு 6 வது விக்கெட் கொடுக்காமல் விளையாடினார்கள். கிட்டத்தட்ட இந்தியாவுக்கும் அந்த டெஸ்ட் தோல்விக்கு சமமானதே.
ரோஷன் சில்வா டில்லியிலும் , ஹனுமா விஹாரி சிட்னியிலும் ஆடிய இன்னிக்ஸ்கள் தராசில் வைத்து நெறுத்தாலும் சமமானதே.
சிங்கத்தை சிங்கத்தின் கூட்டில் புகுந்து சிதறடிப்பதற்கு சமமானது, வெற்றிக்காக அவர்கள் விரிக்கும் வலைகளை எல்லாம் அறுத்தெறிந்து போட்டியை Draw ஆக்குவது மிகப்பெரிய தில்லுதான்.
இன்றைய சிட்னி டெஸ்ட்டில் விஹாரி, அஷ்வின் ஜோடி 260 பந்துகள் (43.2 OVERS )விளையாடியது
விஹாரி 23 *(163)
அஷ்வின் 39 *(128 )
? ஹனுமா விஹாரி VS அவுஸ்திரேலியா.
16, 8 -அடிலெய்ட்
21 -மெல்போர்ன்
4, 23* -சிட்னியில்
பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
ஆனால் பகலிரவு அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் பிங் பந்தில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் பாண்ட் மற்றும் விஹாரி சதம் அடித்தவர்கள் என்பது நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
இந்தாண்டின் ஆரம்பத்தில் நியூசிலாந்தில் வைத்தும் 2 டெஸ்ட்டிலும் ஒரேயொரு அரைசதம் மட்டுமே.
ஆனால் இந்திய A அணிக்காக 100*, 51 என்றும், இந்திய அணிக்காக நியூசிலாந்து அணியுடனான பயிற்சிப் போட்டியிலும் சதமடித்த வீரன் ஏன் டெஸ்ட்டில் சொதப்புகிறானே என்று நான் வருத்தப்பட்டதுண்டு.
இவர் விளையாடியிருக்கும் இன்றைய டெஸ்ட் போட்டியோடு சேர்த்து 12 டெஸ்ட்கள் அதிலே 11 வெளிநாட்டு மண்ணில் ஆடப்பட்டவை, 1 சதம் மற்றும் 4 அரைசதம் மற்றும்படி பேசும்படியாக ஒன்றுமில்லை.
அண்மையில் எனனுடைய Article ஒன்றில் சொல்லியிருந்தேன், முதல்தர போட்டிகளில் 3000 க்கும் அதிகமான FC ஓட்டங்களை பெற்ற ஆக்டிவ் பிளேயர்சில் அதிக சராசரியைப் (56.75) பேணும் மூவருள் ஒருவர் ஹனுமா விஹாரி என்று ❤
இந்த கவலைகள் எல்லாவற்றையும் தீர்க்க காலத்துக்கும் நின்று பேசும் ஒரு இன்னிங்ஸ் சிட்னியில் ஆடிக்காட்டினான் ஹனுமா விஹாரி.
உங்களுக்கு இன்னுமொன்றையும் சொல்லவேண்டும், 2012 இளையோர் உலக கிண்ணம் வென்ற இந்திய அணியில் யாரும் சர்வதேச கிரிக்கெட்டில் கொலோச்சவில்லை, ஏன் IPL இல் கூட அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள்.
அந்த அணியின் தலைவர் உன்முக்த் சந்த் எதிர்கால கோஹ்லி எனப்பட்டவர், ஆளே இல்லாமல் போனார். சந்தீப் சர்மா மட்டுமே 2 T20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியதோடு IPL யிலும் ஜொலிக்கிறார், அபராஜித்தை சென்னை பெஞ்சில் வைத்தே காலம் கடத்தியது.
அப்படி இருக்க அந்த அணியிலிருந்து உருவாகி டிராவிட்டின் பாசறையில் செதுக்கப்பட்டு இந்திய கிரிக்கெட்டில் கொஞ்சமேனும் பேர்சொல்ல வைத்திருப்பவர் ஹனுமா விஹாரி.
? 2012 U19 உலக கிண்ண அணியிலிருந்து ஹனுமா விஹாரி மட்டுமே நின்று சம்பவம் பண்ணிக்கொண்டிருக்கின்றான்.
பான்ட் 118 பந்துகளில் 97
விஹாரி 118 பந்துகளில் 07
இருவேறுவகை ஆட்ட அணுகுமுறைகள்.இன்றைய போட்டியில் விஹாரிக்கு தசைப்பிடிப்பு இல்லாமல் ஆடியிருக்க முடியுமாக இருந்தால் போட்டியைகூட வென்று கொடுத்திருக்கலாம்.
டிராவிட்டின் பிறந்த நாளில் , கோஹ்லிக்கு பிள்ளை பிறந்த நாளில் என்று இந்த ஜனவரி 11 விஹாரி, அஷ்வின் இணைப்பாட்டத்தாலும் பெருமை பெற்றுக் கொள்கின்றது.
❤️கோஹ்லி- விஹாரி ❤
தந்தையாரை இழந்த அடுத்த நாளே கோஹ்லி ராஞ்சி கிண்ண போட்டிகளில் 18 வயதில் விளையாடிய போல , விஹாரியும் 10 வயதில் தந்தையை இழந்து தவித்தாலும் அடுத்த 3 ம் நாள் பாடசாலை கிரிக்கெட் இறுதி போட்டியில் விளையாடி 80 ஓட்டங்கள் பெற்று அணியை வெற்றி பெற செய்தவர்.
தந்தையின் பென்ஷன் பணத்தை வைத்து தாயார் போராட்டத்துக்கு மத்தியில் இவரை கிரிக்கெட்டராக மாற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்பேனில் நடைபெற இருக்கும் போட்டியில் விஹாரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட் விளையாடும் போது இஷாந்த் , புவனேஷ்வர் குமார், ரோஹித் இல்லாமல் இந்தியா ஆடியது.
மெல்போர்ன் மைதானத்தில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட்டில் கோஹ்லி , சாமி இல்லாமல் ஆடியது.
இன்றைய சிட்னியில் நிறைவுக்கு வந்துள்ள 3 வது டெஸ்ட்டில் கோஹ்லி , சாமி , உமேஷ் யாதவ், ராகுல் இல்லாமல் ஆடியது.
பிரிஸ்பேனில் நடக்க இருக்கும் 4 வதும் இறுதியான டெஸ்ட்டில் கோஹ்லி , சாமி , யாதவ் , KL ராகுல் , ஜடேஜா ,ஹனுமா விஹாரி இவர்கள் இல்லாத நிலையில் விளையாடவுள்ளது.
ஆனாலும் இன்னும் போர்டர்- கவாஸ்கர் கிண்ணம் இந்தியாவிடம்தான் உள்ளது. பிரிஸ்பேனில் என்ன நடந்தாலும் இம்முறை அவுஸ்திரேலிய தொடர் பலவித சாதகங்களை நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது என்று நடையைக் கட்டலாம்.
Credit- T.Tharaneetharan (FB post)
11.01.2021