ஃபிஃபா விதிமுறையும், ஷேவிங் ஃபோம் விளம்பரமும்: Gillette ஸ்டேடியத்தின் சுவாரசியமான பின்னணி! 🏟️🪒
2026 FIFA World Cup தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பைக்காக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் (Foxborough) மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்றGillette Stadium ஒரு முக்கிய விளையாட்டுத் மைதானமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானம் தொடர்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரசியமான செய்தி மற்றும் அதன் வரலாற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஸ்டேடியத்தின் முகப்பில் உள்ள பிரம்மாண்டமான “Gillette” லோகோ, ஒரு பெரிய ஷேவிங் ஃபோம் (Shaving Foam) மேகம் போன்ற அமைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.
FIFA அமைப்பிற்கு என மிகவும் கடுமையான வர்த்தகக் கொள்கைகள் (Commercial Policies) உள்ளன. உலகக் கோப்பைக்கு அதிகாரப்பூர்வமாக ஸ்பான்சர் செய்யாத எந்தவொரு நிறுவனத்தின் பெயரோ அல்லது லோகோவோ போட்டிகள் நடக்கும் மைதானங்களில் நேரடியாகத் தெரியக்கூடாது. புகழ்பெற்ற ரேசர் நிறுவனமான ‘கிலெட்’ (Gillette) இந்த முறை FIFA-வின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் கிடையாது.
விதிமுறைப்படி, மைதானத்தின் பெயரை போஸ்டன் ஸ்டேடியம்’ (Boston Stadium) என தற்காலிகமாக மாற்றிய FIFA, அதன் லோகோக்களையும் துணிகளால் மூடி மறைக்க உத்தரவிட்டது. ஆனால், கிலெட் நிறுவனம் தங்களின் லோகோவை சாதாரண கறுப்புத் துணியால் மூடுவதற்குப் பதிலாக, தங்களின் தயாரிப்பைக் குறிக்கும் “ஷேவிங் ஃபோம்” வடிவிலான ஒரு கிரியேட்டிவ் டிசைனைக் கொண்டு மறைத்து, விதியை மதிக்கவும் செய்தது; அதேசமயம் தங்களை தனித்துவமாக விளம்பரப்படுத்தியும் கொண்டது!
இது தற்சமயம் “The cover-up is the campaign” என்ற பெயரில் பெரும் விளம்பர உத்தியாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த மைதானம் 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இதன் அருகில் இருந்த ‘பாக்ஸ்போரோ ஸ்டேடியம்’ (Foxboro Stadium) என்ற பழைய மைதானத்திற்கு மாற்றாக இது கட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இது ‘CMGI ஃபீல்டு’ (CMGI Field) என்று அழைக்கப்பட்டது. பின்னர் புகழ்பெற்ற P&G நிறுவனத்தின் கீழ் உள்ள கிலெட் நிறுவனம் இதன் பெயரிடும் உரிமையை (Naming Rights) வாங்கியதால் இது ‘கிலெட் ஸ்டேடியம்’ என்று பெயர் பெற்றது. இந்த ஒப்பந்தம் வரும் 2031 சீசன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவின் புகழ்பெற்ற ரக்பி அணியான New England Patriots (NFL) மற்றும் கால்பந்து அணியான New England Revolution (MLS) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ சொந்த மைதானமாகும் (Home Stadium).
FIFA-வின் கடுமையான விதிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி, லோகோவை மறைக்கும் இடத்தில் கூட மிகச் சாதுரியமாகத் தங்களை விளம்பரப்படுத்திய கிலெட் நிறுவனத்தின் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் தந்திரம் தற்போது உலகக் கோப்பை ரசிகர்களிடையே லைக்குகளைக் குவித்து வருகிறது.
இதேநேரம் லெவிஸ் ஸ்டேடியம் (Levi’s Stadium) ➡️ ‘சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா ஸ்டேடியம்’
கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற லெவிஸ் (Levi’s) ஜீன்ஸ் நிறுவனத்தின் மைதான பெயர் மாற்றப்பட்டு, அதன் பெரிய லோகோக்கள் வெள்ளை நிறத் துணிகளால் மூடப்பட்டன.
ஆனால், அவர்கள் தங்களின் லோகோவை மூடிய துணியை தங்களின் புகழ்பெற்ற ‘பேட்விங்’ (Batwing – வௌவால் இறக்கை) வடிவத்திலேயே வடிவமைத்தனர். மேலும் மைதானத்தைச் சுற்றி “இங்கு பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை” (#DefinitelyNotLevis) என்ற வாசகங்கள் அடங்கிய நடமாடும் விளம்பரப் பலகைகளை உலவவிட்டு, உலகளவில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தனர்.
#FIFA2026 #Worldcup







