ராஜாதி ராஜா மிரட்டலாக மீண்டும் வலம் வருகிறார்!

ராஜாதி ராஜா மிரட்டலாக மீண்டும் வலம் வருகிறார்! 👑🇧🇷

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 981 நாட்களுக்குப் பிறகு பிரேசில் தேசிய ஜெர்சியில் களமிறங்கி, தனது புன்னகையோடு அசுர கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் நெய்மர் ஜூனியர் (Neymar Jr)!

கால்பந்து உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த தருணம் ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின் 76-வது நிமிடத்தில் அரங்கேறியது. காயம் காரணமாக முதல் இரு போட்டிகளில் ஆடாத நெய்மர், மியாமி மைதானத்தில் மாற்று வீரராக கால் பதித்தபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த கம்பேக் மூலம் 2014, 2018, 2022-ஐ தொடர்ந்து தனது 4-வது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் சாதனையை நெய்மர் எட்டியுள்ளார்.

இந்த ஆட்டத்தில் பிரேசில் 3-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி, குழு C-இல் முதலிடத்துடன் ‘ரவுண்ட் ஆஃப் 32’ நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

வினி ஜூனியரின் இரட்டை கோல் வேட்டை ஒருபுறமிருக்க, நெய்மரின் இந்த மகிழ்ச்சியான கம்பேக் பிரேசில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்துள்ளது! 🔥⚽

#NeymarJr #Brazil #FIFAWorldCup2026 #NeymarIsBack #FootballTamil

Previous article17 வயதில் உலகக் கோப்பை கனவு நனவானது! அஸ்டெகா மைதானத்தில் கில்பெர்டோ மோராவின் அசுர சாதனை!
Next articleஃபிஃபா விதிமுறையும், ஷேவிங் ஃபோம் விளம்பரமும்: Gillette ஸ்டேடியத்தின் சுவாரசியமான பின்னணி!