அண்டர்சன் மற்றும் ப்ரோட் இல்லாது புதுமுகங்களுடன் களமிறங்கும் இங்கிலாந்து- சிக்கலுக்குள் தவிப்பு..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை(12) ஆரம்பமாகவுள்ளது.
லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து வீரர்கள் உபாதைகளால் அவதிப்படும் செய்தி வெளியாகியுள்ளன.
முன்னதாக ப்ரோட் உபாதைக்கு உள்ளாகி இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில், இப்போது பிரதான பந்து வீச்சாளரான அண்டர்சனும் உபாதைகளால் அவதிப்படுவதாக செய்திகள் கிடைக்கின்றன.
இதனால் ஷஹீப் மொஹமட் எனும் புதுமுக வீரர் அணியில் அறிமுகமாகுவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.
அதிகமாக இவர்கள் இருவரும் (Anderson +Briad) விளையாடவில்லை என்றால் வூட் ,ஷஹீப் மொஹமட் ஆகிய வீரர்கள் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களாக நாளைய போட்டியில் விளையாட கூடும் என நம்பப்படுகிறது.
பிந்திய செய்திகளுக்காக காத்திருப்போம்.