ஓய்வு முடிவை அறிவித்தார் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர்..!

ஓய்வு முடிவை அறிவித்தார் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர்..!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் அறிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ண தோல்விக்குப் பின்னர் முஷ்பிகுர் ரஹீம் இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

“எனது டி20 சர்வதேச வாழ்க்கையில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறேன். ஆனால் நான் வங்கதேசத்துக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவங்களில் எனது நாட்டிற்காக தொடர்ந்து விளையாட முடியும் என்று நம்புகிறேன். அதேநேரம் நான் பங்களாதேஷ் பிரீமியர் லீக் மற்றும் பிற போட்டிகளில் விளையாடுவேன் என முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார்.

 

பங்களாதேஷ் விளையாடிய முதல் இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியிலும் முஷ்பிகுர் ரஹீம் விளையாடினார்.

2006 முதல் இதுவரை 102 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1500 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 19.48 மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் 6 அரைச் சதங்கள் அடித்துள்ளார்.