சர்வதேச கிரிக்கெட் பேரவையை பஞ்சாயத்திற்கு அழைத்த இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை, தொடரின் வெற்றியாளர் யார் ?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் நடைபெற்று நிறைவான நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக ஐந்தாவதும் இறுதியுமான மான்செஸ்டரில் இடம்பெறவிருந்த போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
2-1 என இந்தியா தொடரில் முன்னிலையில் இருக்கிறது, ஆகவே தொடரை 2 க்கு 1 என்ற முடிப்பதா அல்லது, 5 வது போட்டியை இந்தியா விளையாட விரும்பாததால் தொடரை 2 க்கு 2 என முடிப்பதா என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தீர்மானம் என்னவென இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் அனுப்பி உள்ளது .
குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரிஸன், சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கொரோனா காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் நான்கு போட்டிகள் கொண்ட தொடராகவும் கணக்கில் எடுக்கப்படும், ஆகவே இப்படியான பல சிக்கல்கள் இருக்கின்றன, இந்த நிலையில் தொடரை எவ்வாறு முடித்துக் கொள்வது என்பது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையாலே தீர்மானிக்கப்படும் என அவர் கூறுகிறார்.
இந்த நிலையில் பிந்திய செய்திகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு 2022 இந்திய அணி மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது.
ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று, இப்போது கைவிடப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியை முடிவுக்குக் கொண்டு வரும் முனைைப்புகளில் இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணங்கி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.