டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தொழில்நுட்ப அலுவலராக செல்லும் மலையக மங்கை..!
இலங்கையின் மலையகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் தொழில்நுட்ப அலுவலராக கலந்து கொள்ளும் முதல் நபர் எனும் பெருமையை செல்வி அகல்யா பெற்றுள்ளார்.
பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமைற்றும் அகல்யா, உலக அளவில் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்தாட்டில் தொழில்நுட்ப அலுவலராக கலந்து கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பதுளை ,பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியை அகல்யாவை நிச்சயமாக நாம் எல்லோரும் வாழ்த்தி பெருமை கொள்வோம்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இம்மாதம் 23 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Via -Kingston King