GAVASKAR SLAMS COACHES
“நாங்கள் எல்லாம் யார்..?! எங்களுக்கு கிரிக்கெட் தெரியாதா.. நாங்கள் வெறுமனே தொலைக்காட்சிக்காக அதன் முன்பு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறோமா பணத்தை வாங்கிக்கொண்டு…?! எங்களை நீங்கள் ஏன் கவனிக்க வேண்டும்..! நாங்கள் சொல்வதை ஒரு காதில் வாங்கிக்கொண்டு மறுகாதில் விட்டுவிடுவது..!
அணியில் பயிற்சியாளர்கள் என நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்.? நியூசிலாந்திடம் 46க்கு தோற்றோம். அடுத்த வந்த போட்டிகளிலும் சரியாக ஆட முடியவில்லை. இந்தத்தொடரிலும் பேட்டிங் பலவீனமாகவே இருக்கிறது. ஆகவே இப்பொழுது இந்த கேள்வி அவசியமாகிறது, என்ன செய்கிறீர்கள் ? பேட்டிங்கிற்கு என்ன முன்னேற்றம் காண முடிந்தது. சரி பந்துவீச்சு சவாலான ஒன்றாகவே இருந்ததாக வைத்துக்கொள்வோம், ஏன் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் கூட அதை எதிர்த்து ஆட முடியவில்லை.?!
நன்றாக ஆடமுடியாதபோது பேட்டிங் வரிசையை மாற்றலாமா என்று கேட்பீர்கள் நான் கேட்கிறேன், பயிற்சியாளர்களை மாற்றலாமா.. நீங்கள் என்ன செய்தீர்கள். ?!அவர்களுக்கு பயிற்சியில் பந்துகளை எறிவது மட்டும் உங்கள் வேலையல்ல., வீரர்கள் தம் ஆட்டத்தில் மேம்படவும், திறம்பட செயல்படவும் நீங்கள் பயிற்சியளிக்க வேண்டும். அதை நீங்கள் செய்வதில்லை. ஆகவே பேட்டர்களிடம் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறீர்கள் என்று கேட்கும் முன்பு , பயிற்சியாளர்கள் அனைவரும் என்ன செய்தார்கள் எனக்கேட்பது அவசியம். ”
– கவாஸ்கர். 🙄😯😯😯
கவாஸ்கர் பெயரில்தான் இந்தத்தொடர் நடக்கிறது என்பது இங்கே நினைவில்கொள்ள வேண்டிய விசயம்.







