மத உணர்வுகளுக்கு மதிப்பு: உலகக் கோப்பையில் மதுபான லோகோவை நீக்கி ஃபிஃபா (FIFA) அதிரடி! 🌍🧤
2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரில், இஸ்லாமிய வீரர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் கலாசார உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவு உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
🏆 “சுப்பீரியர் பிளேயர் ஆஃப் தி மேட்ச்” (Superior Player of the Match):
நடப்பு உலகக் கோப்பையில் ஆட்டநாயகன் விருதுக்கான அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக பிரபல்யமான பீர் நிறுவனமான மிச்செலோப் அல்ட்ரா’ (Michelob ULTRA) செயல்படுகிறது. இதன் காரணமாக, ஆட்டநாயகன் விருது வாங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நினைவுப்பரிசு மற்றும் அவர்கள் பின்னால் இருக்கும் விளம்பரப் பலகைகளில் (Backdrop) இந்த மதுபான நிறுவனத்தின் லோகோ அச்சிடப்பட்டிருக்கும்.
இஸ்லாமிய மார்க்கத்தில் மது அருந்துவது மற்றும் அதன் விளம்பரங்களில் தோன்றுவது தடை செய்யப்பட்டுள்ளதால், முஸ்லிம் வீரர்கள் கோரும் பட்சத்தில் அந்த பீர் நிறுவனத்தின் லோகோ இல்லாத மாற்று கோப்பைகள் மற்றும் விளம்பரப் பின்னணிகளை வழங்க ஃபிஃபா ஒப்புக்கொண்டுள்ளது.
லோகோக்கள் நீக்கப்பட்டு வெறும் “The Superior Player of the Match” மற்றும் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ லோகோ மட்டுமே அதில் இடம் பெறுகிறது.
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் அதிவேக கோல் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி (Ismael Saibari)இந்த லோகோ இல்லாத கோப்பையை முதன்முதலில் பெற்றுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து எகிப்தின் இமாம் ஆஷூர், ஜோர்டானின் அலி ஒல்வான் மற்றும் ஈரானின் ரமின் ரெசாய் போன்ற பல இஸ்லாமிய வீரர்களுக்கு இந்த லோகோ இல்லாத விருது வழங்கப்பட்டுள்ளது.
மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பிற்கு கீழ் இருக்கும் (Underage) இளம் வீரர்களுக்கும் இந்த பீர் லோகோ இல்லாத விருதுகளே வழங்கப்படும் என ஃபிஃபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 உலகக் கோப்பையின் போது எகிப்து கோல்கீப்பர் முகமது எல்-ஷெனாவி பீர் நிறுவன ஸ்பான்சர்ஷிப் காரணமாக ஆட்டநாயகன் விருதை வாங்க மறுத்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த முறை ஃபிஃபா முன்கூட்டியே இந்த சுமுகமான மற்றும் மரியாதைக்குரிய விதியை அமல்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#FIFAWorldCup2026 #Respect #MuslimPlayers #MichelobUltra #FootballTamil







