வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தனஞ்சய டி சில்வாவின் அதிரடி சதம்.
ஆண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. Toss வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 71.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்கள் குவித்துள்ளது.
ஆரம்பத்தில் தடுமாறிய இலங்கை அணியை அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா பொறுப்புடன் விளையாடி மீட்டார். அவர் 168 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 120 ஓட்டங்களை குவித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய முன்னாள் தினேஷ் சண்டிமால் 54, இளம் வீரர் சோனல் தினுஷா 43 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஜஸ்டின் கிரீவ்ஸ் 39 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் மற்றும் ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
#SLvWI #SriLankaCricket #DhananjayaDeSilva #TestCricket #AntiguaTest







