🇨🇩 மைதானத்தில் அசையாமல் நிற்கும் ‘சிலை’ மனிதன்! உலகக்கோப்பையில் வைரலாகும் DR காங்கோ ரசிகர்!🤩

🇨🇩 மைதானத்தில் அசையாமல் நிற்கும் ‘சிலை’ மனிதன்! உலகக்கோப்பையில் வைரலாகும் DR காங்கோ ரசிகர்!🤩

2026 ஃபிஃபா World Cup தொடரில், கொலம்பியாவுக்கு எதிரான முக்கியப் போட்டிக்காக DR காங்கோ அணியின் புகழ்பெற்ற சூப்பர்ஃபேனான மிஷெல் நுகுகா மபோலாடிங்கா (Michel Nkuka Mboladinga) மைதானத்திற்கு வருகைதந்தார்!

கால்பந்து உலகில் ‘லுமும்பா வேகா’ (Lumumba Vea) என்று அழைக்கப்படும் இவர், போட்டி நடக்கும் 90 நிமிடங்களும் மைதானத்தில் ஒரு சிலை போலச் சிறிதும் அசையாமல் ஒற்றைக் கையை உயர்த்தியபடி நின்று தனது அணிக்கு ஆதரவளிப்பார்.

இவரது இந்த அசாத்தியமான போஸ், DR காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாஸாவில் (Kinshasa) அமைந்துள்ள அந்நாட்டின் முதல் பிரதமரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பாட்ரிஸ் லுமும்பாவின் (Patrice Lumumba) நினைவுக் கோபுரச் சிலையை அப்படியே பிரதிபலிக்கிறது!

எபோலா தனிமைப்படுத்தல் (Quarantine) கட்டுப்பாடுகள் காரணமாக போர்ச்சுகல் அணிக்கு எதிரான முதல் போட்டியைத் தவறவிட்ட இவர், தற்போது கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்திற்காக மெக்சிகோ வந்தடைந்தமை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது! 👑🔥

#DRCongo #WorldCup2026 #MichelNkukaMboladinga #PatriceLumumba #ColombiaVsDRCongo #FootballFan #TamilSports

Previous articleதோஹாவில் இலங்கை வீரன் சாதனை
Next article🇭🇷 வரலாற்று சாதனை படைத்தார் லூகா மோட்ரிச்!⚽