17 வயதில் உலகக் கோப்பை கனவு நனவானது! அஸ்டெகா மைதானத்தில் கில்பெர்டோ மோராவின் அசுர சாதனை! 💭🇲🇽
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில் மெக்சிகோ நாட்டின் 17 வயது இளம் மிட்பீல்டர் கில்பெர்டோ மோரா (Gilberto Mora) கால்பந்து உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
செக் குடியரசுக்கு (Czechia) எதிரான நேற்றைய லீக் போட்டியில் மெக்சிகோ அணியின் தொடக்க வீரராக (Starting XI) களம் இறங்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மெக்சிகோ நாட்டுக்காக உலகக் கோப்பை வரலாற்றில் களமிறங்கிய மற்றும் தொடக்க வீரராக விளையாடிய மிக இளம் வயது (17 வயது 240 நாட்கள்) வீரர் என்ற 96 ஆண்டு கால சாதனையை மோரா முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு 1930 தொடக்க உலகக் கோப்பையில் மனுவேல் ரோசாஸ் (18 வயது 88 நாட்கள்) படைத்த சாதனையே இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்தது.
நடப்பு 2026 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் அனைத்து 48 நாடுகளின் வீரர்களிலேயே இவர்தான் மிக இளம் வயது (Youngest Competitor) வீரர் ஆவார்.
உலகக் கோப்பை வரலாற்றில் 18 வயதிற்கு உட்பட்ட நிலையில் களம் கண்ட 8ஆவது இளம் வீரர் என்ற பெருமையை மோரா பெற்றுள்ளார். இந்த வரலாற்றுப் பட்டியலில் பிரேசில் ஜாம்பவான் பெலே (1958) முதலிடத்தில் இருக்கிறார்.
ஜூன் 11 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராக அறிமுகமாகி, தனது அனைத்து 14 பாஸ்களையும் 100% துல்லியமாக கடத்தி அசத்திய ‘மொரிட்டா’, இப்போது மெக்சிகோ நகரின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் தனது உலகக் கோப்பை கனவை நனவாக்கினார்⚽🔥
#Gilberto Mora #Mexico #FIFAWorldCup2026 #EstadioAzteca #FootballTamil







