2014ம் ஆண்டிற்கு பின்னர் அதிகமான டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்ட அணிகள்- இந்தியா முதலிடம்..!
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்ட அணிகள் வரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது.
இந்திய அணி இந்த காலகட்டத்தில் 79 போட்டிகளில் விளையாடி 43 வெற்றிகளைப் பெற்றுள்ளது, இந்த 2014ம் ஆண்டிற்கு பின்னர் இந்திய அணி அதிக தடவைகள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2014 முதல் பின்னர் அதிக டெஸ்ட் வெற்றிகள்:-
43 – இந்தியா
42 – இங்கிலாந்து
37 – ஆஸ்திரேலியா
33 – நியூசிலாந்து
30 – தென்னாப்பிரிக்கா
27 – இலங்கை
26 – பாகிஸ்தான்
இந்தியா – 79 போட்டிகள்
இங்கிலாந்து – 96 போட்டிகள்
ஆஸ்திரேலியா – 71 போட்டிகள்
நியூசிலாந்து – 60 போட்டிகள்
தென்னாப்பிரிக்கா – 64 போட்டிகள்
இலங்கை – 74 போட்டிகள்
பாகிஸ்தான் – 61 போட்டிகள்