#SLvSA-இலங்கை, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர்- அட்டவணை வெளியீடு..!

இலங்கை, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர்- அட்டவணை வெளியீடு..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளும் தென் ஆபிரிக்க அணியின் போட்டிகளுக்கான அட்டவணையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் 2 ம் திகதி ஆரம்பிக்கும் தொடர்
செப்டெம்பர் 14 ம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், 3 போட்டிகள் கொண்ட T20 தொடரும் அட்டவனைப் படுத்தப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 2,4,7 ம் திகதிகளில் ஒருநாள் தொடரும், 10 ,12 ,14 ம் திகதிகளில் T20 தொடரும் இடம்பெறவுள்ளன. அத்தனை ஆட்டங்களும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தியாவுடனான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 3 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்தது , அதிலும் T20 தொடரை இலங்கை அணி வென்று வரலாறு படைத்துள்ள நிலையில் அடுத்துவரும் தென் ஆபிரிக்க தொடர் ரசிகர்களால் பரவலாக எதிர்பார்க்கப்படும் தொடராக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SLvSA series 2021 Schedule 

Previous article#SLvIND _மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று..!
Next articleஇலங்கையில் அமுலுக்குவரும் விளையாட்டு தினம்-ஜூலை 31