இலங்கையில் அமுலுக்குவரும் விளையாட்டு தினம்-ஜூலை 31

இலங்கையில் அமுலுக்குவரும் விளையாட்டு தினம்-ஜூலை 31

ஜூலை 31 ஆம் திகதியை இலங்கையின் தேசிய விளையாட்டு தினமாக அறிவிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.

அதன்படி, கோடைக்கால ஒலிம்பிக்கில் இலங்கைக்கு உலகளாவிய அங்கீகாரம் அளித்து 400 மீட்டர் தடை ஓட்டத்தில் டங்கன் வயிட் வெள்ளிப் பதக்கம் வென்ற நாளாக ஜூலை 31 காணப்பட்டதால் குறித்த தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 2014 இல், அப்போதைய அரசாங்கம் ஏப்ரல் 6 ஐ தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்க முன்மொழிந்தது, ஆனால் ஏப்ரல் புத்தாண்டு பண்டிகை காலத்திற்கு மிக அருகில் இருப்பதால், அந்த நாளின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்படவில்லை.

இதன் விளைவாக, அமைச்சரவை இப்போது ஜூலை 31 க்கு ஒப்புதல் அளித்துள்ளது .தேசிய விளையாட்டு தினத்தை நினைவுகூரும் வகையில் புதிய தேதியை ஒதுக்க விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ சமர்ப்பித்த திட்டத்தின் காரணமாக இனிவரும் ஒவ்வொரு ஜூலை 31 விளையாட்டு தினமாக நினைவுகூரப்படவுள்ளது.