சங்கா, மஹேலவை பின்தள்ளி தலைமைத்துவத்தில் ஷானக படைத்துள்ள புதிய சாதனை..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலங்கை நடத்தும் இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை, தற்போது சூப்பர் 4 சுற்று தொடங்கியதன் மூலம் மிகவும் சூடுபிடித்துள்ளது.

சுப்பர் 4ஸ் போட்டியின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து முதல் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கசப்பான தோல்விக்கு பழிதீர்த்தது இலங்கை அணி.

மேலும் இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக அதிக டி20 போட்டிகளில் இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற கேப்டனானார். 14 டி20 சர்வதேசப் போட்டிகளில் அவர் தலைமையில் வெற்றி கிட்டியுள்ளது.

மேலும், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் தினேஷ் சண்டிமால் ஆகியோர் தலா 13 டி20 போட்டிகளில் இலங்கையை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மாலிங்க 7 வெற்றிகளையும், மத்தியூஸ்்6 வெற்றிகளையும் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியை பொறுப்பேற்ற கேப்டன் தசுன் ஷனாவுக்கு எமது அன்பான வாழ்த்துக்கள்.

எமது YouTube தளத்துக்கு செல்ல ?

 

 

 

 

Previous articleஆப்கானிஸ்தானை அலறவிட்ட இலங்கை -பழிக்குப் பழி தீர்த்தது…!
Next article17 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் 15 தமிழ் வீரர்கள்-விபரம்..!