IPL ஏலத்தில் குதித்த விளையாட்டுத்துறை அமைச்சர்- சுவாரஸ்ய சம்பவம்..!
ஐபிஎல் 2022 மெகா ஏலம்: இந்தியாவின் மேற்கு வங்க விளையாட்டு அமைச்சரும் முன்னாள் இந்திய வீரருமான மனோஜ் திவாரி,IPL சூதாட்ட தொடையிலிருந்து மீண்டு வந்துள்ள கேரள வேகப்பந்து வீச்சாளர் எஸ் ஸ்ரீசாந்த்,இந்தியடை டெஸ்ட் வீரர் புஜாரா மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் உட்பட 590 கிரிக்கெட் வீரர்கள் இரண்டு நாள் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2022 பதிப்பிற்கு முன்னதாக வரவிருக்கும் மெகா ஏலத்தில் பதிவு செய்த 1214 வீரர்களில் 590 பேர் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மனோஜ் திவாரி இறுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்லின் 2018 ல் இறுதியாக விளையாடிய திவாரி, சமீபத்தில் வங்காளத்திற்கான ரஞ்சி டிராபி அணியிலும் இடம்பிடித்தார்.
50 லட்சத்தின் அடிப்படை விலையில் பட்டியலிடப்பட்டுள்ள திவாரி, ஐபிஎல்லில் 98 போட்டிகளில் விளையாடி, அப்போதைய டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் அப்போதைய பஞ்சாப் கிங்ஸ் உட்பட நான்கு அணிகளுக்காக 1695 ரன்கள் எடுத்துள்ளார்.
திவாரி மட்டுமல்ல, மேலும் சில மூத்த இந்திய வீரர்களும் IPL ஏலத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் 2013 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கூறி 7 ஆண்டு தடையை அனுபவித்துவிட்டு கடந்த ஆண்டு போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்பிய இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 50 லட்ச ரூபாய் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். .
38 வயதான அவர் 2021 சீசனில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் இடம்பெற்றார், மற்றும் 2021 இல் மினி-ஏலத்தில் பதிவு செய்திருந்தார், ஆனால் வாங்குபவர்கள் எவரையும் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும், சமீபத்திய உள்நாட்டு சீசனில் அவர் விளையாடவில்லை, இது ஏலத்தில் எடுக்கப்படும் வாய்ப்புகளை பாதிக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தனது முதல் ஐபிஎல் தொடரை வென்ற சேட்டேஷ்வர் புஜாரா, 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த ஆண்டைப் போலவே 20 லட்ச ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்திற்கு திரும்பியுள்ளார். அர்ஜுன் 2021 ஏலத்தில் ஐந்து முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார், ஆனால் காயம் காரணமாக ஒரு ஆட்டம் கூட விளையாடியிருக்கவில்லை.
பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் இரண்டு நாள் ஏலம் நடக்கிறது.
ஆகவே ரசிகர்கள் இதுதொடர்பில் அதிக அக்கறையுடன் காத்திருக்கின்றனர்.