சரித்திரத்தை ஒரு நிமிஷம் திரும்பி பாருங்க 2022 ஆம் ஆண்டு மே 21 இதே நாளன்று டெல்லி அணியை ப்ளே ஆஃப் கனவை நாங்க தகர்த்தோம்,
அதே மாதிரி மே 21 இன்று மீண்டும் ஒருமுறை டெல்லி அணியின் ப்ளே ஆஃப் கனவை தகர்த்து எறிந்து இருக்கிறோம் என இந்த உலகத்திற்கு ஒரு Statement கொடுத்து இருக்கிறார்கள் மும்பை இந்தியன்ஸ் அணியினர் 😎
இந்த சீசனில் தொடர்ந்து தோற்று கொண்டு இருந்த போது டெல்லி அணிக்கு எதிராக ஒரு த்ரில் வெற்றியை பெற்று அதன் பிறகு தொடர்ந்து வெற்றிகளை பெற்று,
இன்று மீண்டும் அதே டெல்லிக்கு எதிராக வெற்றியை பெற்று ப்ளே ஆஃப்பிற்கு முன்னேறியுள்ளது மும்பை 👌
மும்பை அணி ஐபிஎல்’லில் ப்ளே ஆஃப்பிற்கு நுழைவது இது 11-வது முறையாகும்! இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது 😎
மும்பை அணி இந்த சீசனில் முதல் ஐந்து போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை மட்டுமே நான்கில் தோற்று இருந்தது! ஆனால் அடுத்த 8 போட்டிகளில் ஆடி அதில் ஏழு வெற்றிகளை பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு காலடி எடுத்து வைத்துள்ளது….
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் போட்டிகளில் 57 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அதில் 34 வெற்றிகளை பெற்று தந்துள்ளான் 😎
ஆக குறி வெச்சா இறை விழணும்ங்கிற வரிக்கு ஏற்ப ஆறாவது கோப்பைக்கு குறி வெச்சிருக்கிற மும்பை இந்தியன்ஸ் அணியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை 💯
#mumbaiindians #hardikpandya #MIvsDC #MIvsDC2025 #ipl2025 #ipl #cricketfans #cricketlovers







