#NZvPAK_27 லட்சத்திற்கு பிரியாணி உண்டு மகிழ்ந்த பாதுகாப்பு ஊழியர்கள்- பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பில் செலுத்தும் நிலையில் ..!
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் எதுவித போட்டியும் இடம்பெறாத நிலையில் அண்மையில் ரத்து செய்யப்பட்டது.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி, பாதுகாப்பை காரணம் காட்டி தொடரில் இருந்து வெளியேறியது.
போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அதிகாரிகள் இந்த முடிவை அறிவித்தமை உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்திருந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் விஜயத்தின் போது பாதுகாப்பு ஊழியர்கள் உண்டுமகிழ்ந்த பிரியாணி பில் 27 இலட்சமாக அமைந்திருப்பதாகவும் அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் செலுத்த தயாராவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன .
மேலதிக விபரங்களுக்கு நமது You Tube தளத்தை Subscribe செய்யுங்கள்.
அறிக்கைகளின்படி, தொடருக்காக பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு முகவர்களது பிரியாணி பில் பெரும் செலவில் வந்தன, நியூசிலாந்து அணியின் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் உணவுப் பில்களைச் செலுத்த PCB சுமார் 27 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இஸ்லாமபாத் மற்றும் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் இராணுவத்துடன் ஐந்து எஸ்பி க்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட எஸ்எஸ்பி க்கள் (போலீஸ் அதிகாரிகள்) கிவிஸின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டனர்.
அறிக்கையின்படி, ஒவ்வொரு பாதுகாப்பு பணியாளரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரியாணிக்கு ஓடர் செய்தனர், இதன் விலை சுமார் ₹ 27 லட்சம்.
தொடர் ரத்தானமை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி கொடுத்தது, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் ரத்து செய்யப்பட்டை அவர்களுடைய கிரிக்கெட்டுக்கு பாரிய பின்னடைவை தோற்றுவித்திருந்தது.
இதற்காக பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு செலவீனங்கள் இவ்வளவு பெரிய தொகையாக அமைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.