T20 உலக கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் -அதிரடி மாற்றங்கள்..!

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் முதல் 12 அணிகளுக்குள் நுழைவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியும் முதல் சுற்றில் விளையாட வேண்டும்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து இரண்டு டி20 ஜாம்பவான்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் டுவென்டி 20 லீக் கிரிக்கெட் களத்தில் அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்களான அன்ட்ரே ரசல் மற்றும் சுனில் நாரைன் ஆகியோருக்கு மேற்கிந்திய அணியின் கதவுகள் மூடப்பட்டுள்ளன.

நிகோலஸ் பூரன் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணியின் துணைத் தலைவராக ரோமன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவன் லூயிஸ், ஷிம்ரன் ஹெட்மியர், ஜான்சன் சார்ல்ஸ், ஒபைட் மெக்காய் ஆகியோரும் இந்த ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி:

நிக்கோலஸ் பூரன் (c), ரோவ்மேன் பவல் (vc), யானிக் கரியா, ஜான்சன் சார்ல்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லெவிஸ் கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ரேமன் ரெய்ஃபர், ஒடியன் ஸ்மித்

 

 

Previous articleஇந்திய அணியின் தேர்வு முறை -தவறுகள் எவை ?
Next articleசையத் முஷ்டாக் அலி தொடர்- தமிழ்நாடு அணி அறிவிப்பு , சங்கர் நீக்கம் , அபராஜித் தலைவர்…!