டெஸ்ட் கிரிக்கெட்டை தவற விடுவது நீயல்ல அரசனே

டெஸ்ட் எனும் சந்தர்ப்பவாத காட்டில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக தன்னோட பேட்டால ரன் வேட்டையாடி வந்த இந்த அரசன் இன்று முதல் தனது வேட்டையை நிறுத்திக் கொண்டார் 🥺

தன்னால் வேட்டையாட இயலாது என்பதால் அல்ல, தனக்கு இதற்கு மேல் அந்த சந்தர்ப்பவாத காட்டில் வேட்டையாட விருப்பம் இல்லை என்பதால் 🫰

14 ஆண்டுகளாக தனக்கு மட்டுமல்லாமல் தன் படையையும் இந்த காட்டில் மிகச்சிறப்பாக தலைமையோடு அழைத்து சென்று வேட்டையாடி இருக்கிறார் அரசன்!

ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்று கொடுத்த கேப்டன் இந்த அரசன் கோலி தான் 😎

டோனி‌யின் கையிலிருந்து‌ கேப்டன் பொறுப்பை பெற்று இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் உயரத்திற்கு கொண்டு சென்றவர் அரசன் கோலி ஆவார்!

இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தளவிற்கு தனது பேட்டில் இருந்து ரன்களை கொண்டு வந்தாரோ அதே மாதிரி இந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக ரன்களை கொண்டு வர முடியாமலும் தவித்தார் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மை 💯

எப்பேர்பட்ட பவுலர்களையும் அசால்ட்டா அடித்து ஆட்சி செய்தவர் தான் இந்த அரசன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் 💯 🤷 அவரது பேட்டில் இருந்து எந்த அளவுக்கு ரன்கள் வந்தததோ அதை விட அதிகமாக சாதனைகளும் வந்தது!

இந்த டெஸ்ட் கிரிக்கெட் எனும் காட்டில் இருந்து இன்றோடு அரசர் தனது ஓய்வை அறிவித்து விட்டார் தான்! ஆனால் அரசனின் வேட்டைகளின் எண்ணிக்கையை எடுத்து பார்த்தால் தான் தெரியும் அவர் எந்தளவிற்கு வேட்டையாடி இருக்கிறார் என்று 🫰💯

அரசன் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்! ஆனால் அவரின் சாதனைகள் அசைக்க முடியாத சக்தியாக அனைவருக்கும் சொல்லி கொண்டே இருக்கும் அவர் யாரென்று 🫰 அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னவெல்லாம் செய்தார் என்று 🫰

டெஸ்ட் கிரிக்கெட்டை தவற விடுவது நீயல்ல அரசனே 🥺 அந்த டெஸ்ட் கிரிக்கெட் தான் உன்னை தவற விட்டுருக்கிறது என்பதே உண்மை 💯

உன்னோட கடைசி வேட்டையை ஆஸி மண்ணில் நான் வியந்தும் பார்த்தேன்! இப்போது உனது ஓய்வையையும் நான் அவ்வாறே பார்க்கிறேன்! ஏனென்றால் உன்னை குறை கூறும் இடத்தில் இருப்பது உனக்கு நல்லதல்ல என்பதால்!

ஏற்கனவே அன்று 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உன்னை நீ விடுவித்து கொண்டாய் அரசனே! இன்னும் இரண்டு மட்டும் தான் பாக்கி இருக்கிறது!

அந்த இரண்டிலும் (ODI World Cup) &
RCB is IPL Champion அந்த கோப்பைகளை பெற்று உனது கையால் அதை ஏந்தி மகிழந்து மகிழ்ச்சியோடு அதிலும் ஓய்வு பெற்று விடுவாய் என எண்ணுகிறேன் 🫰

அந்த இரண்டில் ஒன்று இந்த வருடம் நிறைவேறி விடும் அரசனே உனக்கு! மற்றொன்று அடுத்த வருடத்தில் நிறைவேறி விடும் 💯

அப்புறம் உன்னோட கனவான அந்த ஒலிம்பிக்கில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கப்பதக்கத்தையும் நீ பெற்று கொடுத்து விடுவாய் என நினைக்கிறேன் 😌

ஓய்வு எடு! ஆனால் உன் சாதனைகள் ஓய்வில்லாமல் இந்த உலகத்தில் உரைத்து கொண்டே இருக்கும் 💯

We Miss you in Test Cricket King Kohli 👑🏏

#viratkohli #testcricket #TeamIndia #cricketfans #cricketlovers

✍️ Sathiya Kumaran

Previous articleடெல்லி Ranji team coach கோஹ்லி பத்தி சொன்னது ,
Next article1998 கோகோ கோலா கோப்பை (Coca-Cola Cup)