ரோஹித் விலகி or விலக்கப்பட்டு பும்ரா நாளை கேப்டனாகக் களம் காணுகிறார்.
ரோஹித் செய்த தவறை எல்லாம் ஃபீல்டில் பும்ரா தவிர்த்தாலே போட்டி இந்தியா பக்கம் திரும்ப வாய்ப்புண்டு.
சிட்னி ஸ்பின்னர்களுக்கு ஆதரவான மைதானம் அவர்களை நம்பி முன்னதாகவே பௌலிங் போடச் செய்யுங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஓவர்கள் கொடுத்து நம்பிக்கை வரவழைத்து விக்கெட்டுகளை அறுவடை செய்யுங்கள் .
ஸ்பின்னர்கள் போடும்போது அட்டாக்கிங் ஃபீல்ட் செட் செய்யுங்கள். ரோஹித் மாதிரி ஃபீல்டர்களை பின்னால் தூக்கிப்போட்டு அவர்களை எளிதாக ரன்கள் குவிக்க விடாதீர்கள்.
சிட்னி ஒரு ஃபிளாட் டிராக் டாஸ் ஜெயித்தால் யோசிக்காமல் பேட்டிங் எடுத்து பெரிய ஸ்கோரை எடுக்க வையுங்கள். இந்தத் தொடர் முழுவதும் சறுக்குவது பேட்டிங்கால்தான்.
பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுக்கு மதிப்புக் கொடுத்து புதுப் பந்தில் அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் பால்களை தவிர்த்து போலந்தை பொறுமையிழக்கச் செய்து அவரைத் தவறு செய்ய வையுங்கள்.
கம்மின்ஸ் விக்கெட் எடுப்பது போலந்து மறு எண்டில் தொடர்ந்து போடும் பிரஷர்னாலேயே அதை உடைத்தாலே இந்தியா ரன்களை எளிதாகக் குவிக்கலாம்.
ஒரு பவுலராக அளவுக்கு அதிகமாகவே இந்த தொடரில் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்துவிட்டிர்கள் தற்போது கேப்டனாக அதே பங்களிப்பை செய்யும் நேரம் வந்துவிட்டது தைரியமாக டெஸ்ட் களத்தில்
புல்டைம் கேப்டனாக இறங்குங்கள்.
#அய்யப்பன்







